1. செய்திகள்

திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

வடக்கு உள் கர்நாடக நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு உள் கர்நாடக நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், விருதுநகர் , ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும்

அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)

சுராலகோடு (கன்யாகுமரி) 8, நாகர்கோயில் (கன்னியாகுமாரி) 7, புத்தன் அணை (கன்னியாகுமாரி), பாபநாசம் (திருநெல்வேலி), மைலாடி (கன்னியாகுமாரி) பேச்சிப்பாறை (கன்னியாகுமாரி ), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமாரி) தலா 6, இரணியல் (கன்னியாகுமாரி), சோலையார் (கோவை) தலா 5, பூதப்பாண்டி (கன்யாகுமரி), தூக்கலாய் (கன்னியாகுமாரி) தலா 4 , குளச்சல் l (கன்னியாகுமாரி), தென்காசி, பெரியாறு (தேனி) தலா 3 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை 

  • இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • இன்று மற்றும் நாளை கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் 

இனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு தினங்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடல் உயர்அலை முன்னறிவிப்பு

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் கீழக்கரை வரை 15.10.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3.4 மீட்டர்வரை எழும்பக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க...

தீபாவளி பரிசாக ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க அரசு முடிவு?

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!

English Summary: Chance of heavy rain in Tirunelveli and Kumari districts In Tamil Nadu Says Imd chennai

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.