1. செய்திகள்

தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் ரத்து: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Ration Card Cancel

தகுதியில்லாதவர்கள் மற்றும் மோசடி செய்து பொருட்கள் வாங்கியோரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.

ரேஷன் கார்டு (Ration Card)

ரேஷன் அட்டையை நிறையப் பேர் தவறாகப் பயன்படுத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. அரிசி, கோதுமை போன்றவற்றை மலிவு விலைக்கு வாங்கு அவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியுள்ள பலருக்கு ரேஷன் உதவிகள் கிடைக்காமல் போகின்றன.

தகுதியில்லாதவர்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தகுதியில்லாதவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான உத்தரவு மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தகுதியில்லாத ரேஷன் கார்டுகள்

2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 4.74 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, சுமார் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் கண்காணிப்பில் உள்ளன. இந்த ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியில்லாதவராக இருந்தால் இவர்களின் ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Operation Yellow

Operation Yellow என்ற பெயரில் தகுதியில்லாத மற்றும் மோசடி செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளை கேரள மாநில அரசு ரத்து செய்து வருகிறது. அதன்படி, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தம் 4,572 ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.96.98 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: பொங்கலுக்கு சூப்பர் அறிவிப்பு!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தானியங்கள் நிலுவை: மத்திய அரசின் ஒதுக்கீடு எங்கே போனது?

English Summary: Cancellation of ineligible ration cards: central government action! Published on: 04 November 2022, 07:52 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.