மாநிலம் முழுவதும், ரேஷன் கார்டுகளை ரத்து செய்யும் பணிகளை வருகிற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேஷன் கார்டு (Ration Card)
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை மாநில அரசு விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த ரேஷன் பொருட்களை தகுதியற்ற நபர்கள் பெற்று, சட்டவிரோதமாக கள்ளச் சந்தை விற்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும், தகுதியற்ற 2.20 கோடி ரேஷன் கார்டுகளை ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக உத்தர பிரதேச அரசு, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் உள்ள பாரபங்கா மாவட்டத்தில், ரேஷன் கார்டு சரிபார்ப்பு முகாம் நடத்தப்படுவதற்கான பொறுப்பு எஸ்டிஎம் மற்றும் பிடிஓ விடம் ஒப்படைக்கப்படும் என்றும், இவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நவம்பர் 30க்குள் தகுதியற்ற ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்த மாவட்டத்தில் உள்ள 5.5 லட்சம் ரேஷன் கார்டுகள் மற்றும் 18,000 அந்தியோதயா கார்டுகள் முறையாக சோதனை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது போக தொடர்ச்சியாக 5 மாதம் ரேஷன் வாங்காதவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர், ஆயுத உரிமம், சொந்த வீட்டு மனை மற்றும் நிலம் வைத்திருப்பவர்களின் கார்டுகளும் ரத்து செய்யப்படும் என அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கையால், ரேஷன் கார்டுதாரர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மேலும் படிக்க
ஆதார் கார்டில் மிகப் பெரிய ஆபத்து: கவனமாக இருங்கள்!
ரேஷன் பொருட்கள் கடத்தல்: தகவல் தெரிவிக்க இந்த எண்ணை அழைக்கவும்!
Share your comments