1. செய்திகள்

ஐடிஐ முடித்துள்ளீர்களா! சென்னையில் மத்திய அரசு வேலை காத்திருக்கிறது: 900மேல் காலி பணியிடங்கள்

KJ Staff
KJ Staff

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள  பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பயிற்சி பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரங்கள்

பணியிடம்: பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை

அமைப்பு: மத்திய அரசு

காலி பணியிடங்கள்: 992

கார்பெண்டர் - 80

எலக்ட்ரீசியன் - 200

பிட்டர் பிரிவில் - 260

மெஷினிஸ்ட் - 80

பெயிண்டர் - 80

வெல்டர் - 290

பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02

வயது வரம்பு: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்,  மற்றும் சமீபத்தில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.6.௨௦௧௯

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்,   https://icf.indianrailways.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN

English Summary: central goverment job in chennai: 992 vacancies for eligible ITI finished students

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.