சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது 900 ரூபாயை தூண்டியுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார்.
சிறிய எரிவாயு சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறியுள்ளார். ரேஷன் கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து நேற்று நடத்தப்பட்ட ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்ற எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள்,எரிவாயு சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் சில்லறை விற்பனை மூலம் விற்கும் திட்டத்தை பாராட்டினர். மேலும், இந்த திட்டத்தில் ஆர்வமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும், அதற்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய சுதான்ஷூ பாண்டே, ரேஷன் கடைகளின் நிதி நிலைமைகளை மேம்படுத்துவதற்கு முன்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். ரேஷன் கடைகள் மூலம் நிதிச் சேவைகளை வழங்கும் திட்டத்தைப் பாராட்டிய நிதி சேவைகள் துறையின் பிரதிநிதி, ரேஷன் கடை டீலர்களுக்கு முத்ரா கடன்களை பெருக்கத்திற்காக நீட்டித்து, தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதிசெய்தார்.
கூட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம், நிதிச்சேவைகள் துறை, பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகள், மாநிலங்கள்-யூனியன் பிரதேச அதிகாரிகள் மற்றும் இந்தியன் ஆயில் கழகம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க:
Ujjawala Yojana: இலவச LPG சிலிண்டர் பெறுவது எப்படி?
பண்டிகை காலங்களில் உயர்த்தப்பட்ட LPG விலைகள்! மக்கள் சங்கடம்!
Share your comments