1. செய்திகள்

பென்சன் இணையதளங்களை ஒருங்கிணைக்கும் மத்திய அரசு: அமைச்சர் தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Pension scheme

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான, பென்ஷன் இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக, மத்திய பணியாளர் நலன் ஓய்வூதிய துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

பென்சன் (Pension)

வங்கியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இரண்டு நாள் நடக்கிறது. இதை நேற்று துவக்கி வைத்து, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசியதாவது: ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை சுலபமாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயுள் சான்று அளிக்கும் நடைமுறை, 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டது. மொபைல்போன் ஆப்' வாயிலாகவும் ஆயுள் சான்றை அளிக்கும் வசதி துவக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணையதளம்

தற்போது, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் வாயிலாக சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதில், ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் வழங்கும் 18 வங்கிகளின் இணையதளங்கள் உட்பட, ஓய்வூதியம் தொடர்பான இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது ஓய்வூதியதாரர்களுக்கு சிரமம் இல்லாமல், தங்களுடைய சேவைகளை பெறுவதற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க

PF அதிக பென்சன் பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!

நானோ மீன் இயற்கை உரம் தயாரித்து தென்னை விவசாயி அசத்தல்!

English Summary: Central government to integrate Pension websites: Minister information! Published on: 08 March 2023, 09:44 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.