விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின் வினியோக நேரம் மாற்றம் (Time Changed) செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நேரத்தைக் கவனத்தில்கொண்டு விவசாயிகள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
-
விவசாயத்திற்கு தினமும் 6 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
-
டெல்டா மாவட்டங்களில் காலை 6 மணி முதல் 12 மணி வரை
-
பிற மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை
-
இவ்வாறு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தின் விநியோக நேரம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
-
இதன்படி டெல்டா மாவட்டங்களில் காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையில் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
-
பிற மாவட்டங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
-
முதல் பிரிவில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும்
-
2-வது பிரிவில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் இலவச மின்சாரம் வினியோகம் செய்யப் படும்.
-
இந்த புதிய நேர மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!
PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!
நெற்பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி -கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
Share your comments