சென்னையில் நேற்று நண்பகல் முதல் பெய்த மிதமான மழை, மாலையிலிருந்து வெளுத்து தொடங்கியது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதித்தது.
பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் வெள்ள நீர் சூழ்ந்துள்ள 4 சுரங்கபாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை போக்குவரத்து துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த நான்கு சுரங்கப்பாதைகளும்,
1.சென்னை துரைசாமி சுரங்கப்பாதை
2.ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை
3.மேட்லி சுரங்கப்பாதை
4.ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகும்.
இந்த திடீர் மழைக்கான காரணம் என்ன?
இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள்,
வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் காலை வரை இருந்து வந்தது. அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. அப்போது திரள் மேகக்கூட்டங்கள் சென்னை பகுதி நோக்கி நகர்ந்து வந்த காரணத்தால், இந்த திடீர் கன மழை கொட்டியது. இந்த திரள் மேகக்கூட்டங்கள் வலுவிழக்கும் வரை சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவித்தனர்.
நான்கு மாவட்டங்களில் ரேட் ஆலர்ட்
சென்னையில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நேற்று மாலையில் நிர்வாக ரீதியாக வழங்கப்படும் அதித கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மொத்தத்தில் சென்னையில் இது எதிர்பாராத மழை என்றே ஆய்வு மைய அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த மழையும் பொது மக்களின் நிம்மதியை வாட்டி வதைப்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
Share your comments