போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும் விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு, கடந்த 2010-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது என்பது நினைவுகூறத் தக்கது. இந்த திட்டமானது, சென்னை துறைமுகத்தின் 10-ம் எண் நுழைவு வாயிலில் தொடங்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் மதுரவாயல் வரை உயர்த்தப்பட்ட தூண்களின் மூலம் சுமார் 20 கி.மீ தூரத்துக்கு பறக்கும் விரைவு சாலையாக இதை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்திற்காக, பல்வேறு இடங்களில் தூண்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. இதற்கிடையே சுற்றுச்சூழல் விதிமீறல்களைக் காரணம் காட்டி, இத்திட்டம் சென்ற அதிமுக அரசால் 2012-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது என்பதும் யாவரும் அறிந்த ஒன்று ஆகும். இந்நிலையில், மதுரவாயல் – சென்னை துறைமுகம் இடையேயான 20.6 கிமீ நீளமுள்ள மேம்பாலச் சாலைத் திட்டம், நீண்ட காலத்திற்குப் பின், இப்போது மீண்டும் தொடங்க உள்ளது.
தமிழக அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட திட்டத்திற்கு ரூ.5,770 கோடியில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் யாத்திரை மையங்கள், முக்கிய வர்த்தக மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகளைத் தேசிய நெடுஞ்சாலைகளாக மேம்படுத்த தமிழக நெடுஞ்சாலைத்துறை முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் எட்டு நெடுஞ்சாலைகள் இணைக்கப்பட உள்ளன. மாநிலத்தில் 6,606 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன, இதில் 1,472 கிமீ மாநில அரசின் தேசிய நெடுஞ்சாலை பிரிவாலும், 5,134 கிமீ தேசிய நெடுஞ்சாலை துறையாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில நெடுஞ்சாலைகள் உட்பட நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 70,556 கி.மீ. தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 10% க்கும் குறைவாக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முக்கிய மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவது அவசியம் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.
மேலும், 2026ம் ஆண்டுக்குள் தரைப்பாலங்களை மாற்றி உயர்மட்ட பாலங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதோடு, நபார்டு வங்கிக் கடன் திட்டத்தின் மூலம் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல் ஆகும்.
மேலும் படிக்க
ICICI வங்கியின் FD-இன் வட்டி விகிதம் உயர்வு! விவரம் உள்ளே!!
வந்தே பாரத் இரயில்: சென்னையிலிருந்து 6 புதிய இரயில்கள் இயக்கம்!
Share your comments