1. செய்திகள்

பிரதமர் மோடி வருகை முன்னிட்டு, சாலை பாதை மாற்றம் அறிவிப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Chennai: Road change ahead of PM Modi's visit! get the information

பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பெரியமேடு பகுதியைச் சுற்றியுள்ள ஈ.வெ.ரா சாலை, தாஷ்பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக்கல்லூரி வரையிலான சாலையில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பதிவை கீழே காணுங்கள்.

அண்ணா சாலை, ஜி.எஸ்.டி சாலை, எஸ்.பி படேல் சாலை, ஆகியவற்றில் போக்குவரத்து இயக்கம் மந்தமாக நடைபெறும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று சாலைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும், மாற்று வழிகளில் செல்ல முன்கூட்டியே திட்டமிடுமாறும் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மே 22 அன்று முதல் மாற்றம் செய்யப்பட்ட சாலை விவரம்:

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஈ.வெ.ரா சாலை, எம்சி நிக்கோலஸ் சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் (மே.22) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், (மே 22,2022) காலை 9 மணி முதல் 11 மணி வரை, ஈ.வெ.ரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் இருந்து தாஸ்பிரகாஷ் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள், அண்ணாமலை சாலைக்குள் அனுமதிக்கப்படாது என போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஒட்டுனர்கள் கங்காதீஸ்வரர் கோயில் தெரு மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டர் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி நாயர் பாயின்ட் சந்திப்பில் இருந்து நேராகவோ, வலது அல்லது இடது புறமாக திரும்பி செல்லலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க: என்றும் இளைமையைத் தரும் ராகி! ஆச்சர்யத் தகவல்!

சேத்துபட்டு சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஹாரிங்டன் சாலையை கடக்க காலை 6 மணி முதல் 8 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பு வழியாக நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்பர்டாங்க் சாலை செல்லும் வாகனங்கள், சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் நேராக மற்றும் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை என போக்குவரத்து காவலர்களால் குறிப்பிட்டுள்ளது. எனவே, இந்த வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் இடது புறமாக திரும்பி எம்சி நிக்கோலஸ் சாலை, டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் கீழ் பகுதி சாலை வழியாக சென்று மறுபடியும் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை, எம்சி நிக்கோலஸ் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்பை அடையலாம்.

மேலும் படிக்க: கொப்பரைத் தேங்காய் மூட்டைகளுக்கு QR Code!

காசி பாயின்ட் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த மே 22 தொடங்கி வரும் 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. எம்.ஜி.ஆர்.நகரில் இருந்து பிள்ளையார் கோயில் தெரு வழியாக ஜாபர்கான்பேட்டை மற்றும் கிண்டி செல்லும் வாகனங்கள் காசி பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திருப்பி உதயம் தியேட்டரை நோக்கி, சுமார் 150 மீட்டருக்கு சென்றால், கே.கே.நகர் ஆர்டிஓ அலுவலகம் மற்றும் அசோக் நகர் 11வது அவென்யூ சந்திப்பில் யு-டர்ன் எடுத்துக்கொள்ளலாம் என போக்குவரத்து போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க தயாராக இருங்கள்!

இலங்கைக்கு நிபந்தனை விதித்த உலக வங்கி! ஏன்?

English Summary: Chennai: Route change ahead of PM Modi's visit! get the information Published on: 26 May 2022, 10:26 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.