1. செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதை அறிந்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

சிங்கங்களுக்கு கொரோனா தொற்று

ஹைதராபாத் உயிரியல் பூங்கா, ஜெய்பூர் உயிரியல் பூங்கா மற்றும் எட்டாவா சிங்க உலாவிடப் பூங்காக்களில் சிங்கங்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதித்த நிலையில், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்கள், பார்வையாளர்கள் வருகையைத் தவிர்க்க மூடப்பட்டன.

இருப்பினும், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது 3.6.2021 அன்று ஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றில் 9 வயதுள்ள நீலா என்ற பெண் சிங்கம் 3.6.2021 அன்று இந்நோயால் இறந்தது.

இதைதொடர்ந்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர்பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

ஆய்வறிக்கை கிடைத்ததன் தொடர்ச்சியாக மேலும் 3 சிங்கம் மற்றும் 4 புலிகளின் மாதிரிகள் விரிவான ஆய்விற்காக இரண்டு நாட்களுக்கு முன் பரோலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஆய்வு

இந்நிலையில், முதலமைச்சர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சென்றார். பின் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு பூங்கா மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் இணைந்து வழங்கும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.

மேலும், மின்கள ஊர்தி மூலம் சிங்கங்கள் இருப்பிடம், புலிகள் இருப்பிடம் மற்றும் சிங்கங்கள் காணுலா இருப்பிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது, அனைத்து விலங்கு காப்பாளர்கள் மற்றும் பூங்கா அலுவலர்களுக்கு முறையான தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க...

கொரோனா நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் ஓரே நாளில் வழங்கப்படும்!!

English Summary: Chief Minister Stalin Visit Vandalur zoo to check Corona impact on lions

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.