சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வளாகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தினை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பல அரசுத்திட்டங்களை தொடங்கி வைத்தார். முதல்நிலை, முதன்மை மற்றும் ஆளுமைத் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் மின்னணு புத்தகங்களை ஒரே நேரத்தில் 100 ஆர்வலர்கள் படிக்க ஏதுவாக வசதி வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மின்னணு நுலகத்தினை தொடங்கி வைத்தார். நில எடுப்பு தொடர்பான அரசாணைகள் மற்றும் நில ஆர்ஜீதம் குறித்த விதிகளின் நான்கு தொகுப்புகளை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தினை செவ்வாய்க்கிழமையான இன்று காலை 11.00 மணியளவில் சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வளாகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறைத் தலைவர் முனைவர். வெ.இறையன்பு., இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்கள்.
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் விவரம்: (சென்னை மற்றும் இதர மையங்கள்)
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (பயிற்சி- 3) (நாள்.15.09.2017) அரசாணை எண்.123 ன்-படி படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS) மற்றும் இரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் சென்னையிலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையிலும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (பயிற்சி-1) (நாள்.30.10.2019) அரசாணை எண்.166-ன் படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் நந்தனம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் தோற்றுவிக்க ஆணையிடப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசு முகமைகளால் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சித்துறைத் தலைவர் கட்டுப்பாட்டில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் தமிழக அரசின் சார்பில் மாணவ / மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீடு மற்றும் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ / மாணவியர்கள் பயிற்சி வகுப்பில் சேர்க்கப்பட்டு, கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சர் தியாகராயா கல்லூரியில் உள்ள போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் 04.10.2017-ல் ஆரம்பிக்கப்பட்டு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 04.12.2018 முதல் 17.12.2022 வரை ஒன்பது அணிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டதன் மூலம் 3,268 மாணவ / மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.
மேலும் காண்க:
மகளிர் தினம்- பெண்களுக்கு சிறப்பு தற்காலிக விடுமுறை அளிக்க அரசு உத்தரவு
Share your comments