மலைக்கோவில்களுக்குச் செல்ல எளிமையாக இருக்கும் வழிதான் இந்த ரோப் கார். அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சிப் பகுதியில் உள்ள கோவிலுக்கு நேராகச் செல்லும் வகையில் இருக்கும் கார், ரோப் கார் ஆகும். இது இப்பொழுது சோளிங்கர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.
சோளிங்கர் ரோப் கார் திட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரோப் கார் பணிகள் 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திட்டப் பணிகள் தற்பொழுது நிறைவு பெற்றுச் சோதனை ஓட்டம் இன்று தொடங்கப்பட்டது.
தற்போது, மலை உச்சியில் உள்ள கோயிலுக்குப் பக்தர்கள் 1,305 படிகள் ஏறிச் செல்ல இருந்த நிலையில் நேரடியாகச் செல்லும் வகையில் இவ்வசதி அமைக்கப்பட்டுள்ளது. 8.26 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரோப் கார் வசதி, மலையடிவாரத்துடன் இணைக்கப்பட்டது.
ரோப் காரில் எட்டு கேபின்கள் இருக்கின்றன. நான்கு அறைகள் மேலே செல்லும், மீதமுள்ளவை ஒரே நேரத்தில் கீழே நகரும் வகையில் அமைக்கப்படுள்ளன. ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் பயணிக்கலாம். அதாவது ஒரே நேரத்தில் 16 பேர் மேலே செல்லவும் மற்றும் 16 பேர் கீழே இறங்கவும் முடியும்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையிலும், வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் இது இருக்கின்றது. அதோடு, மக்களைப் பெரிதும் ஈர்க்கும் விதமாகவும் இந்த ரோப் கார் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டின் சுற்றுலாத்துறை, சுற்றுலாத்தலங்களைப் புதுப்பிப்பது, புதிய திட்டங்களைக் கொண்டு வருவது, மக்களுக்கு ஏற்றவாறு வசதிகளைச் செய்வது முதலான பல திட்டங்களைக் கொண்டுவரும் செயலகளைச் செய்து வருகின்றது. அந்த வகையில் ஒன்றாக இந்த ரோப் கார் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோப் கார் வசதி மக்களிடையே பெரிதும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரோப் கார் பயன்பாட்டுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் பயணிக்க என்றே மக்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மூலமாக சுற்றுலாத்துறைக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க...
ராமேஸ்வரம் கோவிலில் வேலைவாய்ப்பு - ரூ.58,000 சம்பளம்!
IRCTC இரயில் டிக்கெட் முன்பதிவு: மாதம் ரூ.80000 சம்பாதிக்கலாம்!
Share your comments