நேற்று வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதிகளில் நிலவுவதாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட த்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தினை தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக அவலாஞ்சி மற்றும் சின்னக்கல்லாறு பகுதியில் 8 செ.மீ மழையும், க்ளென்மார்கன் பகுதியில் 7 செ.மீ மழையும் என தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் கணிசமாக மழை பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரை விமான நிலைய பகுதியில் அதிகப்பட்சமாக 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக இன்று மற்றும் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிப்பின் விவரம் பின்வருமாறு-
26.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.07.2023 முதல் 01.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே நேரத்தில் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் கடற்கரையொட்டிய பகுதிகளுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று வரை பெய்த மழையளவு குறித்த தகவலையும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதில் நெல்லையில் இக்காலக்கட்டத்தில் இயல்பான மழையளவான 37.4 மிமீ என்பதை தாண்டி சுமார் 126 சதவீதம் கூடுதலாக (84.4 மிமீ) மழைப்பதிவாகி உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
காற்றழுத்த தாழ்வின் அடிப்படையில் மீனவர்களுக்கான எச்சரிக்கையும், சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. அதுத்தொடர்பான முழு அறிவிப்பினையும் காண Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காணவும் என சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
கஷ்டமே இல்லாம மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்
செம கூத்து- விவசாயிடம் லஞ்சமாக வாங்கிய பணத்தை மென்ற அரசு அதிகாரி
Share your comments