1. செய்திகள்

தோட்டக்கலை துறைக்கு மாறும் தென்னை சாகுபடி: விவசாயிகள் எதிர்ப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Coconut cultivation shifting to horticulture

தமிழக வேளாண்மைத் துறையிலிருந்து தென்னை சாகுபடியை தோட்டக்கலைத் துறைக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அதற்கு தென்னை விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அகில இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் 2-வது இடமும், உற்பத்தி திறனில் முதலிடமும், சாகுபடி பரப்பில் 3-வது இடமும் வகித்து வருகிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 37 மாவட்டங்களில் மொத்தம் 10,84,116 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தென்னை சாகுபடி (Coconut Cultivation)

ஓரளவு தண்ணீர் வசதி இருக்கும் பகுதிகளில்கூட, வேளாண்மைத் துறையினரின் ஆலோசனையின்படி, குறைந்த நீரை பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தென்னை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். தென்னையில் ஊடுபயிர் பயிரிடும்போது, வேளாண்மைத் துறையினரே உரிய ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் மத்தியில் வேளாண்மைத் துறையின் கீழ் முக்கிய அங்கம் வகித்து வரும் தென்னையை தோட்டக்கலைத் துறைக்கு மாற்றம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு தென்னை விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தொடர்ந்து வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் தென்னை விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தென்னை பயிர் நீண்டகாலமாக வேளாண்மைத் துறை பட்டியலில் இருந்து வருகிறது.

தென்னை நீண்டகால பயிர் என்பதாலும், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிப்பு உள்ளாகி வரும் நேரங்களில் வேளாண்மைத் துறையில் கீழ்மட்ட அளவில் போதிய களப்பணியாளர் இருப்பதாலும், தென்னை விவசாயிகளுக்கு பூச்சி நோய் மற்றும் நீர் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்குவதாலும், புயல், வறட்சி போன்ற காலங்களில் பயிர் சேத கணக்கீடு மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தருதல் மற்றும் தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்கள் மற்றும் அனுகூலங்களை உடனுக்குடன் பெற்றுத் தர வேளாண்மை துறையில் போதிய களப்பணியாளர்களை கொண்டுள்ளதால், தென்னைப்பயிர் தொடர்ந்து வேளாண்மைத் துறையிலேயே நீடிப்பது விவசாயிகளுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

மேலும் படிக்க

சீரகத் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!

தமிழகத்திலும் மாட்டுச்சாணத்தை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Coconut Cultivation Shifting to Horticulture: Farmers Protest! Published on: 31 July 2022, 10:52 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.