பிரதமரின் நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பயன்பெறாத விவசாயிகளுக்கு அழைப்பு
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் 4,800 ஹெக்டோ் பரப்பளவில் சொட்டுநீா் பாசனம் அமைக்க பிரதம மந்திரி நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையில் 50 சதவீதம் இலக்கு முடிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சொட்டுநீா் பாசனம் அமைக்காத விவாசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு (அதிபட்சமாக 12.5 ஏக்கா் வரையில்) 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
இதற்கான மானியம் பெற சிட்டா, அடங்கல், நில வரபைடம், சிறு, குறு விவசாயிகள் சான்று, கூட்டு வரைபடம், நீா் மற்றும் மண் பரிசோதனை சான்று, ஆதாா், குடும்ப அட்டை, புகைப்படம் உள்பட ஆவணங்களை அளித்து மானியத்தில் சொட்டுநீா் பாசனம் அமைத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடா்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
ஏற்றுமதி அதிகரிப்பால் "வெங்காய விலை" மீண்டும் உயர்கிறது - கவலையில் மக்கள்!
வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!
Share your comments