Coimbatore: Farmers threw away tomatoes as they did not get the right price
கிணத்துக்கடவு(Coimbatore) பகுதியில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அதனை குப்பையில் கொட்டிச் சென்றனர். விவசாயிகளின் இந்த கோபத்திற்கு காரணம் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் தக்காளி உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது கோவை மாவட்டம் ஆகும். குறிப்பாக மார்க்கெட்டில் பெருமளவிலான வியாபாரிகள் வந்து சந்தை வியாபாரிகளிடமிருந்து தக்காளிகளை விலைக்கு வாங்கி கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பது வழக்கமாகும்.
கடந்த சில மாதங்களாக தக்காளி ஒரு பெட்டி 15 கிலோ அளவு கொண்டவை ரூபாய் ஆயிரம் வரை விற்பனையாகி வந்தது.
இன்று ஒரு பெட்டியிந் விலை 50 ரூபாய்க்கு சென்றது. மேலும் இன்று கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வராததால் 50 ரூபாய்க்கும் தக்காளி விற்பனையாகாமல் அப்பிடியே கிடப்பில் கிடந்தது. இதனால் விரக்த்தியடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளியினை குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
மேலும் அவர்கள் கூறியதாவது, ஒரு ஏக்கர் தக்காளி நடவு செய்வதற்கு ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும் சரியான விலைக்கு தக்காளி விற்பனை ஆகாததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனை தமிழக அரசாங்கம் தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்றதால் கிணத்துக்கடவு(Coimbatore) பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க:
Share your comments