1. செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஜூலை 22-ல் கூடுகிறது!

Poonguzhali R
Poonguzhali R
Cauvery Management Commission Meeting on July 22!


காவிரி மேலாண்மை கூட்டம் முன்னர் 3 முறை ஒத்திவைக்கப்பாட்ட நிலையில் இப்பொழுது வரும் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது எனத் தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை மறுநாளான புதன்கிழமை சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வரும் நிலையில் இக்கூட்டம் 22-ஆம் நாள் கூட்டம் நடைபெறுவதாகத் தகவல் வெளிவந்துள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் மாதம் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் 23 ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்பு அந்த கூட்டம் மீண்டும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6 ஆம் தேதியும் கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

இந்திய காலணிகளில் தடம் பதித்த சாதனையாளர்!

இன்றைய வேளாண் செய்திகள்: காய்கறி பயிரிட ரூ. 8 ஆயிரம்!

English Summary: Cauvery Management Commission Meeting on July 22! Published on: 18 July 2022, 04:13 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.