புத்தாண்டு தற்போது உலகமெங்கும் கொண்டாப்பட்டு வரும் இந்த வேளையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வை எட்டியுள்ளது.
சிலிண்டர் விலை ஏற்றம்
சாமானிய மக்களுக்கு பெரும் பாரமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று விலை ஏற்றம். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப அனைத்து பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே வணிக கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை ஏற்றதால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1917க்கு விற்பனையாகிறது. அதே சமயம் மும்பையில் ரூ. 1721க்கும், கொல்கத்தாவில் ரூ.1870க்கும் வணிக சிலிண்டர் விற்பனையாகிறது. இருப்பினும் ஆண்டின் முதல் நாளே இந்த விலை ஏற்றம் நாளடைவில் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்று பொதுமக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டில் மட்டும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.153.5 வரை அதிகரித்தது. தற்போது வீட்டு சிலிண்டர் சென்னையில் ரூ. 1068.5 என்ற விலையில் விற்பனையாகிறது. இறுதியாக கடந்த ஜூலை மாதம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்வு!
இந்தியாவில் நுழைந்தது ஆபத்தான XBB.1.5 வைரஸ்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
Share your comments