கடைகளில் வாங்கும் உணவு பொருட்கள் தரமற்றதாக இருந்தால் அதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்று நுகர்வோர் தின விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
தர்மபுரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வைத்திநாதன், தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (Consumer Protection Act)
விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:- நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமலில் உள்ளது. பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நுகர்வோருக்கு உதவ நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் 3 வகைகளில் செயல்பட்டு வருகின்றன. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து பொதுமக்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து முழுமையாக அறிந்து அவற்றை பின்பற்ற வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்களை உருவாக்கி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
புகார் (Complaint)
இதேபோல் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் சரியாக பின்பற்ற வேண்டும். நுகர்வோர், பொருட்களை பதிவு சான்று உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். பொருட்களின் தரம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாக உள்ளதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
பொருட்களுக்கான ரசீதை கேட்டு பெற வேண்டும். வாங்கும் உணவு பொருட்கள் தரமற்றதாக இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் தெரிவிக்க வேண்டும்.
விழிப்புணர்வு கையேடு (Awareness Book)
இந்த விழாவில் நுகர்வோர் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்ட கலெக்டர், நுகர்வோர் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் சிறந்த நுகர்வோர் அமைப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அலுவலர்கள் ஆகியோருக்கு பரிசுகள், கேடயங்கள், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் படிக்க
கேன் குடிநீர் தரமாக இல்லையா?புகார் அளிக்க இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்!
கேன் குடிநீரின் தரம் எப்படி இருக்க வேண்டும்: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
Share your comments