தேனியில் நுண் உரமாக்கல் மையம், வள மீட்பு மையத்தில் குப்பைகளை தரம்பிரித்து உரமாக்கும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டத்தின் கீழ் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
குப்பையில் இருந்து உரம் (Compost from the Trash)
நகராட்சி சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வரும் நுண் உரமாக்கல் மையம், வள மீட்பு மையத்தில் குப்பைகளை தரம்பிரித்து உரமாக்கும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடந்த இந்த செயல்விளக்கத்தில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, துணைத்தலைவர் செல்வம், ஆணையாளர் வீரமுத்துக்குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க
சிறுதானியங்களில் சத்துமாவுத் தயாரிப்பு: மகளிர் குழு அசத்தல்!
மதுரைப் பெண்ணின் இயற்கை விவசாயம்: உழவன் அங்காடியில் விற்பனை!
Share your comments