Consequences of not wearing a helmet
உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு மதுரையில் விழிப்புணர்வு டூவீலர் பேரணியை போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி துவக்கி வைத்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து துவங்கிய டூவீலர் பேரணியில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் செல்வமுத்துக்குமரன் தலைமை வகித்தார்.
ஹெல்மெட் விழிப்புணர்வு (Helmet Awareness)
டூவீலர் ஓட்டுவோர் பெரும்பாலும் ஹெல்மெட் அணிவது இல்லை. அதை ஒரு பொருட்டாக நினைப்பதும் இல்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 10 லட்சம் பேர் விபத்தில் சிக்கி தலைக் காயங்களுடன் இறக்கின்றனர். சாலை விபத்துகளை தவிர்க்கவும், விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தவிர்க்கவும் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும்.
இதை தவிர்க்க ஹெல்மெட் அணிவது, 'சீட்' பெல்ட் அணிவது அவசியம் என்று டாக்டர் செல்வமுத்துக்குமரன் கூறினார். விழிப்புணர்வு ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாக அதிகாரி கண்ணன், மேலாளர் ஆடல் செய்திருந்தனர்.
உதவி கமிஷனர் திருமலைக்குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இனியாவது மக்கள் விழிப்போடு செயல்பட வேண்டும். தவறாது ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுதல் வேண்டும்.
மேலும் படிக்க
ஊழலுக்கு எதிராக உதவி எண் அறிமுகம்: பஞ்சாப் முதல்வர் அதிரடி!
ஆசிய நாடுகளில் கொரோனா பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Share your comments