1. செய்திகள்

தொடரும் கனமழை- கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

தொடர் கனமழை காரணமாக, கேரளாவில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களிலும் கிராமங்களிலும் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தொடர் கனமழை காரணமாக கேளராவின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொச்சி நகரின் பல பகுதிகளிலும், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள சில நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

பாதக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வருபவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை

ள்ளம் பாதித்த தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் உள்பட கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

5 பேர் புதைந்து பலி

முன்னதாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவில் உள்ள குடையாத்தூர் பகுதியில் நிலச்சரிவால் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரீடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

தமிழக இளைஞர்களுக்கு வேலை- சென்னையில் சிறப்பு முகாம்!

வெறும் 750 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்!

 

English Summary: Continued heavy rain- vacation for educational institutes! Published on: 30 August 2022, 03:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.