கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி வரும் நிலையில், பல்வேறு தொழிற்துறைகள் முடங்கியுள்ளன. ஆனால், வேளாண் துறைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், “அரிசி, கோதுமை மற்றும் கரும்பு பயிர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் மானியம், விலை மற்றும் தொழில்நுட்பம் குறித்த உதவிகள் அதிகமாகவே உள்ளன. இது போன்ற உதவிகளை பருப்பு பயிருக்கும் செய்யவேண்டும்.
குறைந்த வேளாண் பணிகள்
கோவிட் -19 பாதிப்பு மே மாதத்தில் கிராமப்புறங்களில் பரவத் தொடங்கின. மே மாதத்தில் விவசாய நடவடிக்கைகள் மிகக் குறைவு. மே மாதம் உச்சபட்ச கோடை மாதமாகும். இம்மாதத்தில் எந்த பயிரும் விதைக்கப்படுவதில்லை, சில காய்கறிகள் மற்றும் சில பருவகால பயிர்களைத் தவிர வேறு பயிர்கள் அறுவடை செய்யப்படுவதில்லை. அதனால் தற்போது அதிகளவு வேளாண் தொழிலாளர்கள் தேவையில்லை" என்றார்.
விவசாயத்தை பாதிக்காது
மேலும்,“ வேளாண் செயல்பாடு மார்ச் மற்றும் ஏப்ரல் நடுப்பகுதி வரை உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு கணிசமாக குறைந்து மீண்டும் மழைக்காலத்தில் உச்சத்தை அடையும். ஆகவே, மே மற்றும் ஜூன் நடுப்பகுதி வரை குறைவான தொழிலாளர்கள் கிடைத்தாலும், அது எப்படியும் விவசாயத்தை பாதிக்காது" என்று கூறினார்.
கிராமத்திற்கு திரும்பும் நகர மக்கள்
நகர்ப்புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் எண்ணிக்கை கிராமப்புறங்களுக்கு நகர்கிறது. இந்த தொழிலாளர்கள் விவசாயத் துறையில் வாழ்வாதாரத்திற்காக பணியாற்ற தயாராக உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கிராமப்புற மக்களுக்கு சம்பாதிப்பதற்கான முக்கிய ஆதாரமாக இருக்கும் விவசாயத் துறையின் வருமானம் அப்படியே உள்ளது என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
ஊரடங்கால் வங்கி வேலை நேரம் குறைப்பு! - வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு!
தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! இன்று முதல் அமலுக்கு வருகிறது!
Share your comments