1. செய்திகள்

இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது, இதன் மூலம் நாட்டில் சுமார் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது.

கொரோனா தடுப்பூசி 

நாட்டில் கொரோனா பரவலை தொடர்ந்து அதற்கான தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் அனைத்து நாடுகளுக்கு ஈட்டுப்பட்டு வந்தன. இதில் இந்தியாவும் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து, சோதனைகளின் அடிப்படையில் அவை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதன் முதலில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின . முதலில் சுகாதார ஊழியர்களுக்கு ஊசி போடப்பட்டது. பின் பிப்ரவரி 2-ந்தேதி முதல் முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

அதைத்தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்ட பல்வகை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

75 நாட்களாக இந்த தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 7 கோடி பேர் இந்த தடுப்பூசியைப் போட்டுள்ளனர். தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

இந்த நிலையில் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான தடுப்பூசி மையங்கள் நாடு முழுவதும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், அதிகளவில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போடும் பணி தொடங்குவதால் நாட்டில் சுமார் 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்படும். அது முடிந்ததும் மேலும் வயது தளர்வுகள் கொண்டு வரப்படுகின்றன. அப்போது குறைந்த வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படும்.

தமிழகத்தில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி 

தமிழ்நாட்டில் மட்டும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 கோடி பேர் இருக்கிறார்கள். அனைவருக்கும் கண்டிப்பாகத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 

English Summary: Corona vaccine for everyone over the age of 45 from today Published on: 01 April 2021, 07:34 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.