1. செய்திகள்

பயிர் காப்பீட்டு திட்டத்தில் தேயிலை விவசாயம் தொழில்துறையினர் வரவேற்பு

Harishanker R P
Harishanker R P

நடப்பு காரீப் பருவத்தில் இருந்து, தேயிலை விவசாயம் ஆர்.டபிள்யூ.பி.சி.எஸ்., எனப்படும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சமீபத்தில் அறிவித்தது.

சீனாவுக்கு பின் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை உற்பத்தியாளரான இந்தியா, கடந்த 2024ல் 1,382 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்திருந்தது.

முந்தைய 2023ம் ஆண்டில் இது 1,375 மில்லியன் கிலோவாக இருந்தது. மேலும், சிறிய தேயிலை விவசாயிகள் நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலமாக அசாம் உள்ளது.

இதைத் தொடர்ந்து மேற்குவங்கம், தமிழகம், கர்நாடகா, கேரளா, திரிபுரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

English Summary: crop insurance for Tea plantations

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.