இந்தியாவின் பாரம்பரிய சிறுதானியப் பயிர்களில் ஒன்றான, கேழ்வரகு (ராகி) கொல்லிமலைப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கேழ்வரகு சாகுபடி நடைபெறும் இடங்கள்:
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் தான் கேழ்வரகு சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. ஆந்திரா, ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மலைப்பகுதியில் (Hill Station) கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் முழுநீள, அகல நிலப்பரப்பில், பயிரிடப்படும் ஊடுபயிர்களில் (intercrops), முக்கியமான சிறுதானியம் கேழ்வரகு.
பருவகாலம்:
செப்டம்பர் முதல் அக்டோபர் மற்றும் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலமே கேழ்வரகை பயிர் செய்ய ஏற்றது. தற்போது கேழ்வரகு சாகுபடிக்கு ஏற்ற காலம் என்பதால், தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மலைப்பகுதி கிராமங்களான அடுக்கம், வேலிக்காடு, கீரைக்காடு உள்ளிட்ட பகுதிகளில், மானாவாரியாக சாகுபடி (Cultivation) செய்யப்பட்டு வருகிறது.
மகசூல்:
கேழ்வரகு, ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ வரை மகசூல் (Yield) கிடைக்கும். உலர்ந்த கேழ்வரகை கதிரடித்து, புடைத்து, சுத்தப்படுத்திய பின்பு, விற்றால் 100 கிலோ மூட்டையை கிட்டத்தட்ட ரூ.4000 வரை விற்பனையாகும். கேழ்வரகுடன் உளுந்து, துவரை உள்ளிட்ட பயறு வகைப் பயிர்களை 8:2 விகிதத்தில், ஊடுபயிராகப் (Intercrops) பயிரிடுவதன் மூலம், அதிக மகசூலுடன், நல்ல வருமானமும் கிடைக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
நாமக்கல்லில் நவராத்திரியையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு
மரங்களை அடகு வைத்தால், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்! கேரளாவில் புதிய திட்டம்!
Share your comments