தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்ட வாரியாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த முழுத்தகவலை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
மூன்றாவது கொரோனா அலைக்குப் பின்பு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டது. எந்தவகை கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் இயல்பு நிலையில் உள்ளபோது மீண்டும் கொரோனா பாதிப்புத் தற்போது மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் 34 லட்சத்து 65 ஆயிரத்து 490 எனும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 லட்சத்து 21 ஆயிரத்து 552 பேர் குணமாகி இருக்கின்றனர். மொத்தம் 38 ஆயிரத்து 26 பேர் பலியாகி உள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முட்டை விலை அதிரடி உயர்வு! மக்கள் அவதி!!
கொரோனாத் தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாகத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
வேலூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு வீடுகளில் கூடுவதற்கு மீண்டும் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க: 10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தி வருகின்றால், மாநிலம் முழுதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் படிக்க
மாதம் ரூ. 1000 திட்டம்: ஒரு நாளில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகை!
ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
Share your comments