கொரோனா 3-வது அலைத் தமிழகத்தில் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
3-வது அலை (3rd wave)
கடந்த 2 ஆண்டுகளாக நம்மை ஆட்கொண்டுவரும் கொரோனா அரக்கன், இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது 3-வது அலையாக வந்துகொண்டிருக்கிறார். ஒமிக்ரானைக் கண்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலைநில், 3-வது அலையாக வலம் வரும் கொரோனா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய உச்சம் (New peak)
அதிலும் இந்த வாரம் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
புள்ளிவிபரங்கள்
அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒருநாளில் 1,39,253 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 10,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜனவரி 7ம் தேதி 8,981 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 8ம் தேதி 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னையில் தினசரி பாதிப்பு 5000-ஐ தாண்டி உள்ளது. ஜனவரி 8ம் தேதி 5098 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 1332 பேருக்கும், கோவையில் 585 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 309 பேருக்கும், திருவள்ளூரில் 591 பேருக்கும், திருப்பூரில் 226 பேருக்கும், வேலூரில் 243 பேருக்கும், தூத்துக்குடியில் 202 பேருக்கும், திருச்சியில் 237 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பாதிப்பு (Omicron vulnerability)
தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 185 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 6 பேர் வெளிமாநிலத்தவர்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தைக் கடந்தது
இதனிடையே கொரோனா 3- வது அலையில் இந்தியாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை கடந்து இருக்கிறது. முதல் அலையில் இந்த எண்ணிக்கையை எட்ட 120 நாட்கள் ஆனது. இரண்டாவது அலையில் இந்த எண்னிக்கை 50 நாட்களில் எட்டப்பட்டது.
27 மாநிலங்களில் (In 27 states)
இதற்கிடையில், அதிக அளவில் பரவக்கூடிய ஒமிக்ரானின் எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டியுள்ளது. 1,199 நோயாளிகளும் குணமடைந்துள்ளனர். தற்போது இந்தியாவில் ஒமிக்ரான் (Omicron) தொற்று 27 மாநிலங்களில் பரவி உள்ளது.
மேலும் படிக்க...
Share your comments