துணை ராணுவப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் கெசட் ரேங்க் இல்லாத குரூப் பி தரவரிசையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு தற்காலிக போனஸ் வழங்க மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியர்கள் கொண்டாடும் மிக முக்கியப் பண்டிக்கைகளில் ஒன்று தீபாவளி. இப்பண்டிக்கையினை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு தீபாவளி பண்டிக்கை வருகிற நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசின் சார்பில் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் கெசட் ரேங்க் அல்லாத குரூப் பி தரவரிசையில் உள்ள மத்திய அரசு பணியாளர்களுக்கு தற்காலிக போனஸ் வழங்க மத்திய அரசு செவ்வாயன்று ஒப்புதல் அளித்துள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மேற்குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரும் ஊழியர்களுக்கு தற்காலிக போனஸாக அதிகப்பட்சம் ₹7,000/- வரை கிடைக்கும் என தெரிய வருகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் இந்த போனஸ் பெறுவதற்கு சில நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது. அவற்றின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-
அமைச்சகத்தின் கூற்றுப்படி, மார்ச் 31, 2023 இல் சேவையில் இருந்த ஊழியர்கள் மற்றும் 2022-23 இல் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ச்சியான சேவையை வழங்கியவர்கள் மட்டுமே போனஸ் பெற தகுதியுடையவர்கள்.
- வாரத்திற்கு ஆறு நாட்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு 240 நாட்கள் என மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அலுவலகங்களில் பணிபுரிந்த சாதாரண தொழிலாளர்கள் இந்த போனஸ் பெறுவதற்கு தகுதியுடையவர்.
- அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த ஆர்டர்களின் கீழ் உள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அருகிலுள்ள ரூபாய்க்கு ரவுண்ட் ஆஃப் செய்யப்படும்.
- அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த தற்காலிக போனஸின் கணக்கில் ஏற்படும் செலவினம், நடப்பு ஆண்டிற்கான சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள்/துறைகளின் அனுமதிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து செலுத்தப்பட வேண்டும்.
- டிசம்பர் 16, 2022 தேதியிட்ட செலவினத் துறையின் அறிவிப்பின்படி இந்தக் கணக்கின் செலவு அந்தந்தப் பொருளின் தலைவருக்குப் பற்று வைக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசும் இந்த மாத இறுதிக்குள் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பினை வெளியிடலாம் என மாநில அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் காண்க:
மகளிருக்கான ரூ.1000- அக்டோபர் மாதத்தில் 8833 பயனாளிகள் தகுதி நீக்கம்!
Share your comments