ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பினை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் வெளியிட்டு வருகிறது. அதுத்தொடர்பான தகவல்கள் பின்வருமாறு-
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று தீர்வு காண விவசாயிகள் குறைதீர்வு முகாம் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் (GDP HALL -லில்) நடைபெறவுள்ளது.
இம்முகாம் நாளில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் (GDP HALL- ல்) அனைத்து துறை மாவட்ட அலுவலர்களுடன் விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்காணும் முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். அதுசமயம் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமிற்கு வரும் விவசாயிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து முகாமில் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 30.08.2023 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 15- வது தவணைத் தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உரிய முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.
எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறும், பி.எம். கிசான் திட்டத்தில் இதுவரை பயன் பெறாத விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி இத்திட்டத்தில் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.
மேலும் காண்க:
Namoh 108 தாமரை, புதிய வகை கற்றாழையினை அறிமுகப்படுத்தியது NBRI
Share your comments