1. செய்திகள்

Breaking News: கலைந்தது ரஜினி மக்கள் மன்றம்-சூப்பர்ஸ்டார்!!

T. Vigneshwaran
T. Vigneshwaran

கலைந்தது ரஜினி மக்கள் மன்றம்

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து, சார்பு அணிகள் எதுவுமின்றி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று சூப்பர்ஸ்டார் தெரிவித்தார்.

மேலும்,வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கால சூழலால் நாம் நினைத்ததை செய்ய முடியவில்லை. வர போகிற காலங்களிலும் அரசியலுக்கு வர மாட்டேன் என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அந்த அறிக்கையில் "ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ,உறுப்பினர்களுக்கும், என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. அதை விளக்க வேண்டியது என் கடமை.

நான் அரசியல் கட்சி  ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும்,மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை.வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கு இல்லை.ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இனை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்  என்று ரஜினி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க:

பெண்களுக்கான இலவச பேருந்து வசதியில் மாற்றம்- இன்று முதல் அமல் – தமிழக அரசின் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசிக்கு பிறகு உடலுறவு கூடாது!!

ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல்: ஜூலை 19 வரை ஊரடங்கு.

English Summary: Dissolved Rajini People's Forum: Superstar

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.