பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் பி.டி.ஆஷா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பிளாஸ்டிக் (Plastic)
வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கூறியதாவது: மது பாட்டில்களை திரும்பப் பெறுவது போல் பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்ப பெறலாம். அதனால் மீண்டும் பயன்பாட்டுக்கு வராமல் தடுக்கலாம். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை அளிக்கலாம். மஞ்சப்பை திட்டத்தை அமல்படுத்தி வருவது போல் மாற்று பொருள்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
பள்ளி கல்லுாரிகளில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பாதிப்புகளை உணர்வதாகவும் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 'பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் அமலில் உள்ளதே தவிர கழிவுகளை அழிப்பதற்கான விதிகள் ஏதும் இல்லை' என கூறிய நீதிபதிகள் 'பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா அல்லது உற்பத்தியை அனுமதித்து புழக்கத்தில் விட்ட பின் மேலாண்மை மட்டும் செய்யும் திட்டம் உள்ளதா?' என கேள்வி எழுப்பினர். மத்திய மாநில அரசுகள் இதற்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 12-க்கு நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர்.
மேலும் படிக்க
சிசிடிவி கேமரா: மருத்துவ கல்லூரிகளில் கட்டாயம்!
கொடைக்கானலில் 500 ரூபாய் கள்ள நோட்டு: அச்சத்தில் பொதுமக்கள்!
Share your comments