தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 37,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.424 உயர்ந்து ரூ.38,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 53 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 4,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.90 பைசா அதிகரித்து ரூ.66.30 காசுகளுக்கும், கிலோவுக்கு 66,300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க:
Share your comments