1. செய்திகள்

நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? தினமும் ரூ.50 முதலீடு செய்தால் போதும்!

KJ Staff
KJ Staff
Do you want to become a millionaire? It is enough to invest Rs 50 per day!

Credit : Gulf News

சிறுசேமிப்பு என்பது நம்முடைய இக்கட்டான நேரங்களில் தவறாமல் கைகொடுக்கும் அட்சயப் பாத்திரம். ஆக இதனை நினைவில் வைத்துக்கொண்டு சிறுக சிறுகச் சேமித்தால், நாமும் கோடீஸ்வரர் ஆக முடியும்.

அந்த வகையில், நீங்கள் கோடீஸ்வரராக வேண்டுமா? அப்படியானால், சிறந்த திட்டத்தில் உங்கள் பணத்தில் முதலீடு செய்யுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)

தினசரி 50 ரூபாய் முதலீடு செய்து நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியும். எஸ்ஐபி முதலீட்டில் அந்த இலக்கை எவ்வாறு அடைவது என்று இங்கே பார்க்கலாம்.

சிறு துளி பெரு வெள்ளம் (pennies make pound!)

நீங்கள் இப்போது சேமித்து வந்தாலே உங்களது ஓய்வுக் காலத்தில் மிகப் பெரிய தொகையை உங்களால் ஈட்டிவிட முடியும்.

அனைவருக்குமே உடனடியாக கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது மிகவும் எளிதான விஷயம் இல்லை. நீங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்தால் அந்த ஆசையை நீங்கள் நிறைவேற்றலாம்.

எஸ்ஐபி முதலீடு! (Invest in SIP)

தொடர்ச்சியான சிறிய அளவிலான முதலீட்டில் பெரிய அளவில் லாபம் ஈட்டுவதற்கு எஸ்ஐபி முதலீடு (SIP - Systematic Investment Plan) சிறந்த தேர்வாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை எடுத்து வைப்பதால் அது உங்களது பட்ஜெட்டை பாதிக்காது. அதேநேரத்தில் கண்ணுக்குத் தெரியாமல் சேமிப்பும் நடக்கிறது. இப்படி நீண்ட கால அடிப்படையில் இந்தத் திட்டத்தில் உங்களுக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கிறது.

எஸ்ஐபி மூலம் முதலீடு செய்தால் சந்தையில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும் காலங்களில் உங்கள் முதலீட்டை சமமாகக் கையாள முடியும். எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யும் போது மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்டுகளை வாங்குவதற்கான செலவு சராசரியாக இருக்கும். இதன் காரணமாக முதலீட்டில் ஏற்படும் ஆபத்து குறைகிறது.

முதலீடு செய்வது எப்படி ? (How to Invest)

ஆன்லைன் (On-line)மூலமாகவோ ஆஃப்லைன் (Off-line)மூலமாகவோ இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். ஏதேனும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் அதன் இணையதளத்தில் நீங்கள் கணக்கு தொடங்கலாம். எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

கோடீஸ்வரர் ஆவது எப்படி? (How to become a millionaire?)

நாம் அன்றாடம் ரூ.50 முதலீடு செய்தால் 30 ஆண்டுகளில் அந்தத் தொகை ரூ.1.04 கோடியாக உங்களுக்குக் கிடைக்கும். 15 சதவீத ரிட்டன் லாபத்தில் இந்தத் திட்டம் உங்களுக்குக் கிடைக்கும்.

நீங்கள் 30 ஆண்டுகளில் முதலீடு செய்யும் தொகை ரூ.5.40 லட்சம் மட்டுமே. ஆனால், உங்களுக்குக் கிடைப்பதோ ரூ.94,60,004. எனவே நேரத்தை வீணாக்காமல், பணத்தை செலவு செய்யாமல், சிறுசேமிக்கத் தொடங்குவோம்.

மேலும் படிக்க...

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் தற்போதைய பேலன்ஸை பார்ப்பது எப்படி?

வெறும் 160 ரூபாய் முதலீட்டில் 23 லட்சம் சம்பாதிக்கலாம்!

தேயிலையில் கொப்பள நோய் தாக்குதல்- தடுக்க எளிய வழிகள்!

English Summary: Do you want to become a millionaire? It is enough to invest Rs 50 per day!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.