கொரோனா உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இந்த ஒரு விஷயத்தைச் செய்தால், கொரோனாத் தீவிரமாகி மரணமும் வரும் என இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக சீனாவில் தோன்றி பரவினாலும், இன்றைக்கு 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பு, ஆயிரக்கணக்கானோர் பலி என மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால், கொரோனா வைரஸ் என்ற வார்த்தையே கொடூரமானதாக உணரப்படுகிறது.
எனவே கொரோனா பாதிப்பு தொடர்பாக உலகமெங்கும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் (கிளிப்ட்) ஒரு ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இதில் வெளியான முக்கியத் தகவல்கள் இதோ!
புகையின் ஜோடி (Pair of smoke)
புகை பிடித்தால் இதய நோய், புற்றுநோய் உள்பட பிற நோய்கள் பாதிப்பதுபோலவே கொரோனாவும் தீவிரமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே புகை பிடிப்பதை கைவிடுவதற்கு இது ஏற்ற தருணமாக இருக்கிறது.
கொரோனா தீவிரமாகும் (The corona is intense)
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 469 பேரை ஆராய்ந்ததில் புகை பிடிப்பதற்கும், கொரோனா தீவிரம் அடைவதற்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி (Admitted to hospital)
புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில் புகை பிடிப்போருக்கு கொரோனா பாதிக்கிறபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 80 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளது. இவர்கள் இறக்கவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- இனிமேல் அந்த சிகிச்சை கிடையாது!
கொரோனாவுக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50,000: மத்திய அரசு தகவல்!
Share your comments