1. செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- இனிமேல் அந்த சிகிச்சை கிடையாது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Recurrent corona exposure- Patients no longer have this offer!
Credit : Healthline

சென்னைக் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொடூரக் கொரோனா (Cruel corona)

கொரோனா பாதிப்பு நமக்கு பலவிதப் பாடங்களையும், அனுபவங்களையும் அளித்துச் சென்றுள்ளது. இருப்பினும், முழுவதும் கட்டுப்பாடிற்குள் வந்தபாடில்லை.

8 ஆயிரம் பேர் பலி (8 thousand people were killed)

சென்னையில் இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 270 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8 ஆயிரத்து 467 பேர் பலியாகி விட்டனர்.
5 லட்சத்து 38 ஆயிரத்து 745 பேர் குணமடைந்து விட்ட நிலையில் 2 ஆயிரத்து 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக தினசரி பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. 180 முதல் 220 வரை தினசரி பாதிப்பு பதிவாகிறது.

இவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் பதிவாவதற்கு  மார்க்கெட் போன்றப் பொதுஇடங்களில் அதிகமாக கூடுதல், நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவையே காரணம். ஒரு தெருவில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருந்தால் அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தற்போது 110 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளன.

தொற்று பரவுகிறது (The infection is spreading)

கொரோனா பாதித்த பலர் வீட்டு தனிமையில் இருப்பதாகக் கூறிக்கொண்டு, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால், ஒரே வீட்டில் நான்கைந்து பேருக்குத் தொற்று பரவிவிடுகிறது.மேலும் கொரோனாத் தொற்று உள்ள நபர், வெளியே நடமாடுவதால் மற்றவர்களுக்கும் பரவுகிறது.

எனவே கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வீட்டுத் தனிமை கிடையாது (There is no home loneliness)

அதன்படி கொரோனா பாதித்தவர்களுக்கு இனிமேல் வீட்டுத் தனிமை கிடையாது. வீட்டில் தனிமைப்படுத்தக் கூடாது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 14 நாட்கள் வரை அங்குத் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்

கண்காணிப்பு (Tracking)

கட்டாயம் வீட்டுத் தனிமை வேண்டுவோரின் வீடுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்கள். தனியறை, கழிப்பறை போன்ற கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்த்து அனுமதி வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வீட்டுத் தனிமை ரத்து செய்யப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

இவ்வாறு ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க...

அச்சச்சோ மீண்டும் கட்டுப்பாடுகளா? கொரோனாவை விரட்ட புதியத் திட்டம்!

நெருங்கும் கொரோனா 3- வது அலை- தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து!

English Summary: Recurrent corona exposure- Patients no longer have this offer! Published on: 29 September 2021, 07:38 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.