கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலை இந்தியாவில் எப்போது வருமோ என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் பலி (Thousands killed)
உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தவர்கள் கணக்கிலடங்கா.
நாள்தோறும் பாதிப்பு (Daily vulnerability)
நாள்தோறும் கொரோனா வைரஸ் 2வது அலையால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தடுப்பூசி (Vaccine)
வைரஸ் தொற்றிடம் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள ஏதுவாக உலகம் முழுவதும் தற்போதுத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
18 கோடி பேர் (18 crore people)
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.99 கோடியைத் தாண்டி உள்ளது.
28ம் தேதி முதல் அமல் (Effective from 28th)
இந்தநிலையில் இத்தாலி நாட்டில் உள்ள மக்கள் வரும் 28ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பொதுமக்களுக்கு விலக்கு (Exempt for the public)
நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக் கவசங்கள் அணிவதிலிருந்து பொது மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால் அதே சமயம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஒரு சில பகுதிகளில் அந்த தளர்வுகள் பொருந்தாது.
இங்கிலாந்து அறிவித்தது (UK announced)
ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாலும், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதாலும் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது.
இத்தாலியிலும் (And in Italy)
தற்போது இங்கிலாந்தை அடுத்து இத்தாலி நாடும் முக கவசம் அணிவதிலிருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எதிர்பார்ப்பு (Expectation in India)
இந்தியாவிலும் இந்த நிலை எப்போது வருமோ என மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
கொரோனா 3-வது அலை (Corona 3rd wave)
இது ஒருபுறம் இருக்க, செப்டம்பர் - அக்டோபரில், கொரோனா 3-வது அலைத் தாக்கும் என்றும், குறிப்பாகக் குழந்தைகளை குறிவைத்துப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது, மறுபுறம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
3-வது அலையை எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
Share your comments