1. செய்திகள்

கோடை மழையால், உப்பின் விலை டன் ஒன்றுக்கு 4 மடங்கு உயர்வு

Deiva Bindhiya
Deiva Bindhiya
Due to summer rain, the price of salt increased 4 times per ton

தூத்துக்குடி: கோடை மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடியில் உப்பு விலை ‘கிடுகிடு’ என்று உயர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இந்தியாவில், உப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழநாட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. மேலும், உப்பு உற்பத்தி என்றாலே முதலில் நினைவுக்கு வரும் மாவட்டம் தூத்துக்குடியாகும்.

உப்பு உற்பத்தி(Salt production):

தூத்துக்குடி மாவட்டத்தில் சூரங்குடி, வேம்பார், தருவைகுளம், முத்தையாபுரம், தூத்துக்குடி, முள்ளக்காடு, பழையகாயல், ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகள் உப்பு உற்பத்திக்கு ஏற்றதாக அமைந்து உள்ளதால் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்தியாவில் ஆண்டுக்கு 1¾ கோடி டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது என தரவுகள் கூறுகின்றன. இதில் குஜராத்தில் 1¼ கோடி டன் உப்பும், தூத்துக்குடியில் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியும் செய்யப்படுகிறது.

மழையால் பாதிப்பு(Damage by rain):

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் முதல் வாரம் வரையில் உப்பு உற்பத்தி நடக்கும். இந்த ஆண்டும் வழக்கம் போல் உப்பு உற்பத்தி தொடங்கியது. ஆனால், அவ்வப்போது கோடை மழை காரணமாக, உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விலையும் ‘கிடுகிடு’ என்று உயர்ந்து வருகிறது. இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்களின் கருத்தையும், தெரிந்துக்கொள்ளுங்கள்

இதுகுறித்து தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் தேன்ராஜ்-இன் கருத்து:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை அவ்வப்போது பெய்து வரும் காலம் தவறிய மழையினால், உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக, இந்த காலகட்டத்தில் 5 முதல் 7 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, இருப்பு வைக்கப்படும். ஆனால், தற்போது சுமார் 15 ஆயிரம் டன் வரை மட்டுமே இருப்பில் உள்ளது, கவலை அளிக்கிறது.

4 மடங்காக உயர்ந்த உப்பு விலை (4 times higher salt price):

உப்பு கையிருப்பு குறைந்த காரணத்தால், அதன் விலையும் அதிகரித்து வருகிறது. வழக்கமாக 1 டன் உப்பு ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது. ஆனால், சமீபத்தில் விலை ‘கிடுகிடு’ என்று உயர்ந்து 1 டன் உப்பு ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது.

தற்போது உப்பு உற்பத்திக்கான ஏற்பாடுகள் மீண்டும் நடந்து வருவதும் குறிப்பிடதக்கது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள், இது பலரின் வாழ்வாதாரம் ஆகும். மழை இல்லாதபட்சத்தில் 20 நாட்களுக்குள் மீண்டும் புதிய உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் தேன்ராஜ் கூறினார்.

மேலும் படிக்க:

அசானி புயலால் 17 விமானங்கள் ரத்து, தமிழக வானிலை நிலவரம்!

தோல் பிரச்சனைகளை தீர்க்க உதவும் விலாமிச்சை வேர்!

English Summary: Due to summer rain, the price of salt increased 4 times per ton Published on: 11 May 2022, 03:48 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.