தக்காளியைத் தொடர்ந்து கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில், கத்தரிக்காய் சாகுபடி (Eggplant Cultivation) செய்யப்படுகிறது.
கத்திரிக்காய் விலை உயர்வு (Eggplant Price Raised)
மழை மற்றும் குளிர்காலங்களில் கத்தரிக்காய் விற்பனை அதிகரிக்கும். தற்போது மழைக்காலம் என்பதால், கத்தரிக்காய் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மழையால் தமிழகம் முழுதும் கத்தரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், அவற்றின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. சமீபத்தில் இதேபோன்ற நிலை தக்காளிக்கும் ஏற்பட்டது.
இதனால், கிலோ தக்காளி 150 முதல் 180 ரூபாய் வரை விற்கப்பட்டது.
தற்போது தக்காளி விலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கத்தரிக்காய் விலை (Eggplant Price) கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில், கிலோ முதல்தர கத்தரிக்காய் நேற்று 70 முதல் 80 ரூபாய் வரையும்; இரண்டாம் தர கத்தரிக்காய் 60 முதல் 80 ரூபாய் வரையும் விற்கப்பட்டன.
பொதுமக்கள் அதிர்ச்சி (Public Shocked)
இவற்றை வாங்கிச் சென்ற சில்லரை வியாபாரிகள், கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்தனர். கத்தரிக்காய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல்!
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன? சந்தை தகவல் மையம் கருத்து!
Share your comments