1.வேளாண் அலுவலகத்தை அமைத்துத் தருமாறு ஏலகிரி விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாட்டின் ஏலகிரியில் தொன்றுத்தொட்டு விவசாயம் செய்து வரும் பழங்குடியின விவசாயிகள் எங்கள் பகுதியில் வேளாண் அலுவலகத்தை அமைத்துத் தருமாறு பலமுறை கோரிக்கை அளித்தும் உரிய பலனில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
சிறு மற்றும் நடுத்தர வர்க்கப் பின்னணியில் இருந்து வந்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசாங்கத்தின் மானியங்களை நம்பியிருக்கிறார்கள். அரசு மானியம், விதை, உரம் மற்றும் பிற வேளாண் பொருட்களை சேகரிக்க, 5,000க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயிகள், திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள ஜோலார்பேட்டைக்கு தான் தற்போது செல்ல வேண்டியுள்ளது. ஆதலால் ஏலகிரி பகுதியிலேயே வேளாண்மை அலுவலகத்தை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள்.
2.பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89 அடிக்கு கீழ் சரிந்தது
நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,156 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் வினாடிக்கு 800 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3.தர்ப்பூசணி பழங்கள் விற்பனை தீவிரம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த பழத்தில் அதிகமாக தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், இரும்புசத்து ஆகியவை உள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல்சூட்டை தணிக்க தர்ப்பூசணி பழங்களை ெ்பாதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் நாகுடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகிய பகுதியில் இருந்து தர்ப்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்கி வந்து அதிராம்பட்டினத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதிராம்பட்டினம் பஸ் நிலையம், காலேஜ் முக்கம், சேர்மன் வாடி, பெரிய மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
4.சந்தைக்கு வந்து குவியத் தொடங்கியுள்ள மாம்பழங்கள்
சீசன் தொடங்குவதற்கு முன்னரே சேலம் சந்தைக்கு வந்து குவியத் தொடங்கியுள்ள மாம்பழங்கள்....
தொடர் மழை காரணமாக விளைச்சல் அதிகரித்ததால் முன்கூட்டியே வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல்...
5.நாட்டின் முதல் குளோனிங் பசு கங்கா
இந்தியாவின் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (NDRI) விஞ்ஞானிகள் நாட்டின் முதல் கிர் ரக பசுங்கன்றுவை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த கன்று மார்ச் 16 அன்று பிறந்தது, தற்போது இந்த பெண் கன்றுக்கு கங்கா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குளோனிங் முறையில் பிறக்கும் போது பசுங்ன்றின் எடை 32 கிலோவாக இருந்தது. ஆனால், இப்போது இந்த கன்று நல்ல உடல்நலத்துடன் வளர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். கிர் மற்றும் சாஹிவால் ஆகிய இரு மாட்டினங்களை குளோனிங் செய்து இந்த பசுங்கன்றை, தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனம் 2009 இல் உலகின் முதல் குளோனிங் செய்யப்பட்ட எருமையையும் ஏற்கனவே உருவாக்கி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6.கோவையில் நாளை மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் இயங்காது
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை பின்பற்றாம ல் இறைச்சிக்கடைகள் திறந்து வைத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
7. 'உயிர் காக்கும் குச்சி' உருவாக்கிய மாணவர்கள்
விஜயநகரத்தில் உள்ள காஸ்பா மாநகராட்சி உயர்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் குழு விவசாயிகளை பாம்புக்கடியில் இருந்து பாதுகாக்கும் வகையில், 'உயிர் காக்கும் குச்சி' உருவாக்கியுள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் பகுதிகளில் ஏற்படும் விவசாயிகளின் இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பாம்புக்கடி விளங்குகிறது. இந்நிலையில் தான் பள்ளி மாணவர்கள் குழு ஒன்று “உயிர் காக்கும் குச்சி” என்கிற கருவியினை உருவாக்கியுள்ளனர்.
மேலும் படிக்க
உருளை விளைச்சலை அதிகரிக்க Lay’s கையிலெடுக்கும் புதிய முயற்சி !
24 மணி நேரத்தில் விவசாயிகளுக்கு ரூ.62,000 இழப்பீடு- வடமாநில விவசாயிகளை கலங்க வைத்த ஆலங்கட்டி மழை
Share your comments