விவசாய சட்டங்களை இரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில், 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்றம் விவசாய சட்டங்கள் பற்றிய அறிக்கையை ஆராய்ந்து, அறிக்கை வெளியிட நிபுணர்கள் குழுவை நியமித்தது. இன்று, விவசாய சட்டங்கள் பற்றிய, தன் அறிக்கையை, உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு சமர்ப்பித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு (Agri laws) எதிராக, ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், கடந்த, 125 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், 11 சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதற்கிடையே, 'மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை' எனக் கூறி பலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இடைக்கால தடை
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜனவரி 12-இல், மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த, இடைக்கால தடை விதித்தது. மேலும், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், விவசாய சங்கங்களுடன் பேச, நிபுணர் குழு ஒன்றையும், உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழுவில், சேட்கெரி சங்கிதனா அமைப்பை சேர்ந்த அனில் கன்வாட், பிரமோத் குமார் ஜோஷி, விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்தக் குழு, நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், நேரிலும், 'வீடியோ கான்பரன்ஸ் (video conference)' வழியாகவும் பேச்சு நடத்தியது.
இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பான தங்கள் அறிக்கையை, நிபுணர் குழு, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் வெளியாகவில்லை. ஹோலி (Holi) பண்டிகையின் விடுமுறைக்குப் பின், உச்ச நீதிமன்றம், ஏப்., 5ம் தேதி முதல், மீண்டும் செயல்பட உள்ளது. அதன் பின், நிபுணர் குழு அறிக்கையை, தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை
நிபுணர் குழு வட்டாரங்கள் கூறுகையில், '85க்கும் அதிகமான விவசாய சங்கங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. அவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' என, தெரிவித்தன.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கோடை உழவுக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்!
கடன்களிலிருந்து எப்படி வரியை சேமிக்கலாம்! சில உதவிக்குறிப்புகள்.!
Share your comments