விவசாயிகளுக்கு வழங்கப்படும் உழவர் அட்டையை, வியாபாரிகள் மோசடியாக பெற்று, உழவர்சந்தையில் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேளாண் விற்பனைப் பிரிவு பகிர்ந்துள்ள தரவுகளின்படி, திருப்பூரில் 3,393 விவசாயிகள் உழவர் அட்டை வைத்துள்ளனர். அவர்களில், 901 பயனாளிகள் புதிய விண்ணப்பதாரர்கள், 1,882 பேர் தங்கள் அட்டைகளை புதுப்பித்துள்ளனர். மொத்தம் 541 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து New Indian Express வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஏ.பரமசிவம் கூறுகையில், "பல வியாபாரிகள் உழவர் அட்டைகளை முறைகேடாக வாங்கி சந்தைகளில் கடைகளை அமைத்துள்ளனர் என்றும், போலி பயனாளிகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்து, விவசாயிகளின் நலனுக்கான அமைப்பை அழித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
வேளாண் வணிக (திருப்பூர் பிரிவு) துணை இயக்குனர் வி.சி.மகாதேவன் கூறுகையில், "உழவர் சந்ததியை உருவாக்குவதன் நோக்கம் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையே நேரடி தொடர்பை மேம்படுத்துவது என்றும், இத்தைகைய நோக்குநிலையில் இது போன்ற போலி அடையாள அட்டை பெற்ற நபர்கள் இயங்குவது சரியில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், இடைத்தரகர்களோ, தரகர்களோ இல்லாமல் விவசாயிகள் முழு லாபம் பெறலாம். இந்த பண்ணை சந்தைகளில் சில விவசாயிகள் மற்ற விவசாயிகளிடமிருந்து அறுவடைகளை வழங்குகின்றனர் என்று எண்ணுவதாகவும், தகுந்த சோதனை நடத்தி, போலி பயனாளிகளின் அட்டைகள் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
மீனவர்களுக்கு வர இருக்கும் பயோமெற்றிக் பதிவு-இனி எந்த பயமும் இல்லை!
Aavin: ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு!
Share your comments