இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகள் மற்றும் அதன் எண்ணிக்கை, போலி ரேஷன் கார்டுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், ரேஷன் கார்டுகள் மற்றும் பயனாளிகளை ஆய்வு செய்வது, போலி ரேஷன் கார்டுகளை கண்டறிவது, பயனாளிகளை சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மாநில அரசுகளின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளது.
போலி ரேஷன் கார்டுகள் (Fake Ration Cards)
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பயனாளிகள் இருப்பதாக மத்திய அரசு தகவல் கூறுகிறது. தேசிய அளவில் 2023 ஜனவரி 1 வரை 55 லட்சம் போலி ரேஷன் கார்டு பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாநில வாரியாக போலி ரேஷன் கார்டு பயனாளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு,
- தமிழ்நாடு - 75,689
- புதுசேரி - 2,435
- அந்தமான் நிகோபார் தீவுகள் - 819
- அருணாசல பிரதேசம் - 36,430
- அசாம் - 39,476
- பீஹார் - 6,67,688
- சண்டிகர் - 25,175
- சத்தீஸ்கர் - 2,19,187
- கேரளா - 28,396
- கோவா - 2,852
- குஜராத் - 1,94,029
- ஹரியானா - 3,30,520
- இமாசலப் பிரதேசம் - 21,657
- ஜம்மூ காஷ்மீர் - 33,982
- ஜார்கண்ட் - 2,27,085
- லடாக் - 787
- கர்நாடகா - 1,29,001
- தெலங்கானா - 77,874
- ஆந்திர பிரதேசம் - 1,82,375
- டாமன் டயு - 352
- டெல்லி - 4,26,865
- லட்சத்தீவு - 1,902
- திரிபுரா - 10,284
- உத்தராகண்ட் - 92,181
- உத்தரப் பிரதேசம் - 9,21,175
- மேற்கு வங்கம் - 2,71,701
- மத்திய பிரதேசம் - 3,68,950
- மஹாராஷ்டிரா - 3,10,928
- மணிப்பூர் - 1,80,602
- மேகாலயா - 2,082
- மிசோரம் - 2,338
- நாகாலாந்து - 26,526
- ஒடிசா - 2,00,636
- பஞ்சாப் - 1,16,168
- ராஜஸ்தான் - 3,06,190
- சிக்கிம் - 2,957
- மொத்தம் - 55,37,294
மேலும் படிக்க
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அகவிலைப்படியும் விரைவில் உயரும்!
PF தொடர்பான சந்தேகம் இருக்கா? வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் நம்பர் இதோ!
Share your comments