சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை திடீரென சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் வழக்கத்தை விட வரத்து அதிகரித்ததாலும், கிறிஸ்துமஸ் மற்றும் நள்ளிரவு பெய்த மழை காரணமாக வியாபாரம் குறைந்ததால், அனைத்து அத்தியாவசிய காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. இதனால், வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
காய்கறிகள் விலை சரிவு
கேரட், பீட்ரூட் ஆகியவை ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முள்ளங்கி, சவ்சவ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் 7 முதல் 15 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆந்திர வெங்காயம் கிலோ 14 ரூபாய்க்கும், நாட்டுதக்காளி கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வழக்கமாக 7 ஆயிரம் டன் காய்கறிகள் வரத்து இருக்கும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று ஆயிரம் டன் காய்கறிகள் கூடுதலாக வந்துள்ளன.
ஊட்டி கேரட் மட்டும் 65 டன் வந்துள்ளது. மாலூர் கேரட் 60 டன் என மொத்தம் 125 டன் வந்துள்ளது. அதேபோல் தக்காளி 1000 டன் வந்துள்ளது.
மேலும் படிக்க
பொங்கல் பரிசுத் தொகுப்பில் பஞ்சாப் பச்சரிசி: தமிழக விவசாயிகள் அதிருப்தி!
ரேஷன் கடைகளில் வெல்லம் விற்பனை செய்யுங்கள்: தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!
Share your comments