குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் அரசு சார்பிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு தொகை தற்பொழுது இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது, முன்னர் ரூ. 2 லட்சம் வழங்கி வந்த இழப்பீடு தொகை தற்பொழுது ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய கரும்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு பாலாஜி என்பவருடன் திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பாடி அரசு மருத்துவமனையில் கடந்த 2018 ம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும் தான் கர்ப்பமானதால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து பாடி மருத்துவமனைக்கு சென்று கேட்டதில் அங்கு உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!
கர்ப்பத்தினைக் கலைக்க வேண்டும் என்று கேட்டபோது அது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை தவறும்பட்சத்தில் அதற்கான இழப்பீடாக 30 ஆயிரம் ரூபாய் தருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வேறு வழி இன்றி மூன்றாவது குழந்தையினைப் பெற்றுக் கொண்டதாகவும் , குடும்ப கட்டுப்பாடு தோல்வி அடைந்ததால் தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார், கனிமொழி.
இந்த வழக்கினை விசாரித்த நிலையில் வழக்கின் இறுதியில் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குடும்ப கட்டுப்பாடு காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திகு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கின்றது எனவும், அதுவே, ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கின்றது எனவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறி, அரசாணையை தாக்கல் செய்தார்.
மேலும் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை 60 நாட்கள் எனும் நாட்கள் வரை இருந்தால் சிகிச்சைக்கான செலவு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments