1. செய்திகள்

புகையிலைக்கு மாற்றாக வரும் ஆரோக்கியம் நிறைந்த "கொளப்பலூர் நெல்லி சீவல்"!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

ஈரோடு மஞ்சரி ஹனி தயாரிப்பு (Manjari honey) நிறுவனம் தனது 33-வது மதிப்புக்கூட்டு பொருளாக "கொளப்பலூர் நெல்லி சீவல்"-லை அறிமுகம் செய்துள்ளது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அறிமுகம் செய்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ''மஞ்சுளா & பார்த்திபன்'', இவர்கள் 10 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பு மற்றும் தேன் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். இவர்கள் அண்மையில் கிருஷி ஜாக்ரன் farmer the Brand மூலம் அதிகம் பிரபலம் அடைந்தனர்.

கொளப்பலூர் நெல்லி சீவல்

ஏற்கனவே 32 வகையான மதிப்புக்கூட்டு பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில் தங்களின் 33வது மதிப்புக்கூட்டு பொருளாக "கொளப்பலூர் நெல்லி சீவல்"-லை (Kolappur nelli flakes) அறிமுகம் செய்துள்ளனர். இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அறிமுகம் செய்து வைத்தார்.

நெல்லிக்காய்களில் உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயம் உள்ளிட்டவை சேர்த்து இந்த நெல்லி சீவல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது புகையிலை, ஹான்ஸ், குட்காவிற்கு மாற்றாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக மஞ்சரி ஹனி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

புகையிலைக்கு மாற்று

மேலும், இதனை நாவிற்கு அடியில் அல்லது வாயில் சிறிதளவு வைத்து அடக்கிக் கொண்டால் உமிழ்நீர் அதிகம் சுரக்கிறது தண்ணீர் தாகம் கிடைக்கும் பசியின்மை போகும் புகையிலைப் பொருட்கள் போடுவது குறைகிறது. பீடி, சிகரெட்டு, பாக்கு, குட்கா, ஹான்ஸ் மற்றும் புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பது நாளடைவில் மறந்து விடுவதற்கு துணைபுரிகிறது. புகையிலைபொருட்களை உபயோகிக்க நினைக்கும் போது இதனை வாயில் வைத்துக் கொண்டால் போதும் நாளடைவில் புகையிலை பொருட்களை மறக்க ஏதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரத்திற்கு ஏற்றது

"கொளப்பலூர் நெல்லி சீவல்" வாயில் இருக்கும்போது உமிழ்நீர் சுரந்து கொண்டிருந்தாலும் அதனை விளுங்கிக் கொள்ளலாம் பாதிப்பு இல்லை எனவே உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது சுகாதாரமும் பேணப்படுகிறது சுற்றுச்சூழல் அசுத்தமில்லாமல் இருக்கும். பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் நன்மை கிடைக்கும். இதன் விலையானது  10 கிராம் 25 ரூபாய்க்கும் 20 கிராம் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

இந்த நிகழ்ச்சியில் மஞ்சுளாவின் கணவர் பார்த்திபன், கோப்பிச்செட்டிப்பாளைம் வேளாண் அறிவில் நிலையத்தின் தலைவர் அழகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

மேலும் படிக்க.... 

உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி!!

குறைந்த செலவில் அதிக மகசூல் பெற மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்!!

வேளாண் மற்றும் தோட்டக்கலை முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை

அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!

English Summary: Farmer the Brand fame Couple Manjula and parthiban has launched "Kolappalur Nelly Sival" as its 33rd Value Added Product.

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.