ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2020-21 - ம் ஆண்டுக்கு விவசாய பயன்பாட்டிற்கான சமுதாய திறந்தவெளி கிணறு அமைத்தல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தங்களது விவசாய நிலங்களில் இத்திட்டத்தின்கீழ் கிணறு அமைக்க சிறு, குறு விவசாயிக்கான சான்று, ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அடையாள அட்டை மற்றும் நிலவுடைமை உள்ளிட்ட இதர ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உறிஞ்சப்பட்ட அல்லது ஆபத்து நிலையில் உள்ளது என மத்திய நீர்வள ஆதார அமைப்பினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மேலும் குறைவான நிலப்பரப்பினைக் கொண்ட தனிநபர் விவசாயிகளை கருத்தில் கொண்டு குறைந்தது 3 விவசாயிகள் குழுவாக இணைந்து தங்களுக்குள் நீர் பங்கீடு குறித்து மேற்கொள்ளும் உறுதியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் விவசாய பயன்பாட்டிற்கான சமுதாய திறந்தவெளி கிணறு ரூ.12.25 லட்சம் அரசு மானியத்தில் இத்திட்டத்தின் கீழ் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!
Share your comments