Krishi Jagran Tamil
Menu Close Menu

மிளகு கொடிகளை பதம் பார்க்கும் வெட்டுக்கிளிகள் - வேளாண்துறை அலோசனை!

Saturday, 20 June 2020 07:33 AM , by: Daisy Rose Mary

கொல்லிமலையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகு கொடிகளை கடித்து நாசம் செய்து வரும் வெட்டுக்கிளிகளை, மருந்து தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விவசாயிகள் புலம்பிவருகின்றனர்.

பாகிஸ்தான் வழியாக வடஇந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் (Locust attack) பல லட்சம் ஏக்கர் பயிர்களை நாசம் செய்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு உட்பட்ட வளப்பூர் நாடு இளமாத்திப்பட்டி பகுதிகளில் உள்ள மிளகு தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் குவிந்து அவற்றை நாசம் செய்து வருகிறது. இதனால் மிளகு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related link:
Locust Attack: பருத்திச் செடிகளில் வெட்டுக்கிளி தாக்குதல்

இது குறித்து தோட்டக்கலைத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படது. இதனை ஆய்வு செய்த தோட்டக்கலை துறை அதிகாரிகள் வெட்டுக்கிளிகளை புகைப்படம் எடுத்து, கோவை வேளாண் பல்கலை பூச்சியியல்துறை பேராசியர் மற்றும் தோட்டக்கலை உதவி பேராசிரியர், வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் நாமக்கல்லுக்கும் அனுப்பி வைத்தனர்.

ஆய்வு முடிவில், அவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் சாதாரண வெட்டுக்கிளி' என்பதும் தெரியவந்தது. இவ்வகை வெட்டுக்கிளிகள், 'காபி' வெட்டுக்கிளிகள் என அழைக்கப்படுவதாகவும், 'காபி' தோட்டங்களில் காணப்படும் சாதாரண வெட்டுக்கிளிகள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கூறுகையில், பொதுவாக இவ்வகை வெட்டுக்கிளிகள், கோடை காலங்களில் அதிகளவில் காணப்படும். இயற்கையாகவே பறவைகள் விரும்பி உண்ணும் பூச்சி இனங்களில் ஒன்றாக இருப்பதால், இவ்வகை வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன என்றார்.

வெட்டுக்கிளிகள் வந்தால் தடுப்பது எப்படி?

வெட்டுக்கிளிகள் பரவாமல் தடுக்க, வேம்பில் இருந்து தயாரிக்கப்பட்ட அசார்டிரெக்டின் 1,500 பி.பி.எம்., மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஐந்து மில்லி கலந்து மிளகு கொடிகளில் இலைகள் நன்கு நனையும்படி தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும், அருகில் உள்ள நிலப்பரப்பிலும் தெளிக்க வேண்டும். வயல்களில் உள்ள களைச்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். காலை, 6:00 முதல், 9:00 மணி வரை, மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை, மருந்து தெளிப்பது சிறந்தது என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்தார்.

இதனிடேயை, மருந்துகள் தெளிக்கப்பட்டும் வெட்டுக்ளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், வெட்டுக்கிளிகள் தொடர்ந்து மிளகு கொடிகளை நாசம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க..
Locust Attack: தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பரவலா? விவசாயிகள் பீதி!

வெட்டுக்கிளி பாலைவன வெட்டுக்கிளி grasshopper Locust வேளாண் செய்திகள் விவசாயத் தகவல்கள் Locuts attack
English Summary: Farmers are worried that they cannot control the grasshopper even after Chemical spraying

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. குறைந்தது புரெவி புயலின் வேகம்! இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
  2. கேரளாவில் பரவுகிறது தென்னை வேர் வாடல் நோய்! எல்லையோரத் தமிழக மாவட்டங்களிலும் பாதிப்பு!
  3. மாதந்தோறும் லாபம் வழங்கும் கோழிப்பண்ணை! இப்போதே அமைக்க கடன் வழங்கும் வங்கிகள்! வாங்க தொழில் தொடங்கலாம்..!!
  4. உரச்செலவை குறைத்து அதிக சாகுபடி பெற வேண்டுமா? - வேளாண்துறை சொல்வதைக் கேளுங்கள்!!
  5. இயற்கை விவசாயமும், பாரம்பரிய அரிசி ரகங்களும்!! மனம்திறக்கும் கடலூர் விவசாயி சிவக்குமார்!!
  6. நெற்பயிருக்கு காப்பீடு செய்ய மீண்டும் வாய்ப்பு- காலஅவகாசம் டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு!
  7. தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள்!! - வேளாண்துறை!!
  8. MGNREGA திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
  9. IOC நிறுவனத்தில் வேலை- 493 பணியிடங்களுக்கு அறிவிப்பு!
  10. வங்கக்கடலில் உருவானது புரெவி புயல்- தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.