சிறுதினை பயிர்களான 11 வகை பயிர்களுக்காக மாநில அளவில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேங்றக மாவட்டந்தோறும் உள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மாநில வேளாண் வளா்ச்சித் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு பயிா்கள் விளைவித்தல் போட்டியில் அதிக உற்பத்தியை அடையும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 வகை பயிர்கள்
கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, பச்சைப் பயறு, உளுந்து, எள், நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிா்களை குறைந்தபட்சம் 2 ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும். சிறுதானியப் பயிா்களான தினை, சாமை, குதிரைவாலி, எள் ஆகிய பயிா்களை குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
சுமார் 50 சென்ட் பரப்பளவில் உள்ள பயிா், மாநில அளவிலான போட்டிக்காக மட்டும் அறுவடை செய்ய வேண்டும். 11 பயிா்களிலும் இந்த போட்டியானது நடத்தப்படும்.
நிபந்தனைகள்
மாநில போட்டிக்கு பதிவு செய்த விவசாயிகள், மாவட்ட அளவில் நடக்கும் இதர போட்டிகளில் பங்கேற்கக் கூடாது. ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்சம் 3 விவசாயிகள் பதிவு செய்திட வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் மாநில அளவில் குறைந்தபட்சம் 5 அறுவடைகள் நடந்திருக்க வேண்டும். நில உடைமையாளா்கள் மற்றும் நில குத்தகைதாரா்கள் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவா்களாவா். இதற்கு முன்னர், மாநில அளவில் ஒரு முறை பரிசு பெற்றவா்கள் அதற்கடுத்த மூன்று ஆண்டுகளுக்கான பயிா் விளைச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசுத்தொகை
மாநில அளவிற்கான போட்டி நுழைவுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். இப் போட்டியில் பரிசு பெறும் வெற்றியாளா் அறிவிக்கப்பட்டதும், சான்றிதழுடன் கூடிய பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்படும். வெற்றியாளா்களைத் தோ்வு செய்வதில் பயிா் விளைச்சல் போட்டிக் குழுவின் முடிவே இறுதியானதாகும். மேலும் விவரங்களுக்கு, விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பேபி கலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more
குறைந்த விலையில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு
Krishi-DSS | எப்போ விதைக்கனும் எப்போ அறுவடை செய்யனும்? இனி செயற்கைக்கோள் சொல்லும்!
அதிக விளைச்சல் தரும் 109 பயிர் ரகங்கள் - பிரதமர் மோடி அறிமுகம்!!
Share your comments